என் மலர்
முகப்பு » வியட்நாம் போர்
நீங்கள் தேடியது "வியட்நாம் போர்"
அமெரிக்காவின் அரிசோனா செனட் சபை உறுப்பினரும் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளருமான ஜான் மெக்கெய்ன் உடல்நலக்குறைவால் காலமானார். #JohnMcCain #US
நியூயார்க்:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் அரிசோனா மாநிலத்தின் சார்பில் உறுப்பினராக இருந்தவர் ஜான் மெக்கெய்ன் (வயது 81). அமெரிக்க கடற்படை அதிகாரியாக இருந்த இவர் வியட்னாம் போரில் கைது செய்யப்பட்டு வடக்கு வியட்னாமில் போர் கைதியாக சிறையில் இருந்தவர்.
இதனால் போர் நாயகனாக அறியப்படும் ஜான், கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர். இந்த தேர்தலில் பராக் ஒபாமாவிடம் அவர் தோல்வி கண்டார்.
கிளையோபிளாஸ்டோமா எனப்படும் மூளை புற்றுநோயால் இவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் தொடர்ந்து ஒரு வருடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஜான் மெக்கெய்ன் மரணம் அடைந்து உள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அலுவலக தகவலில், செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் 2018ம் ஆண்டு ஆகஸ்டு 25ந்தேதி மாலை 4.28 மணியளவில் காலமானார்.
அமெரிக்காவுக்காக மரணம் அடையும்வரை அவர் 60 ஆண்டுகள் சேவை செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
×
X